ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதான்கோட் விமானநிலையம் ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமானபடை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் நேற்று இரவு தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப்படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு எல்லை பகுதியில் நேற்று இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப்படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னயெச்சரிகையாக ஐம்மு மற்றும் பஞ்சாப் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாள் அப்பகுதிகள் நேற்று இரவு இருளில் மூழ்கின.
0 கருத்துகள்