பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அதிகரித்தநிலையில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ராமதாஸ் செய்தியரளர்கள் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில் அன்புமணி மீது அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தியது அன்புமணி
அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்
தன் அம்மா மீது பாட்டிலை தூக்கி அடித்தது அன்புமணி
சோறு தண்ணீர் இல்லாமல் உழைத்தேன் பா.ம.க. என்ற கட்சியை தொடங்கிய எனக்கு அன்புமணி கட்டளை போடுகிறார் இது யார் உழைத்து வளர்த்த கட்சி யார் யாருக்கு கட்டளை போடுவது
பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும் அவரது மனைவியும் எனது காலில் விழுந்து கெஞ்சினார்கள். இல்லையென்றால் அவருக்கு நான் கொள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்று அன்புமணி என்னை மிரட்டினார் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன்.
வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது
இவ்வாறு ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
0 கருத்துகள்