நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை மாற்றம் செய்துள்ளார் அதற்க்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார் நாட்டின் எல்லையில் நடந்து வரும் நிகழ்வுகளையும், தற்போதைய உயர்ந்த விழிப்புணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு, மே 16ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.நமது வீரர்கள் நாட்டின் எல்லையில் தைரியத்துடன் நின்று தாய்நாட்டை பாதுகாக்கும் இந்த நேரத்தில், கொண்டாட்டங்களை விட ஒற்றுமையும் அமைதியும் தேவை. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த கணங்களில், நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் காதுமாக நிற்கும் நமது வீரர்களையும் வீராங்கனைகளையும் நினைக்கிறோம். ஒரு நல்ல குடிமகனாக நாம் பொறுமையாகவும், ஒற்றுமையுடனும் பதிலளிக்க வேண்டியது நமது கடமை. கொண்டாட்டத்திற்கு பதிலாக இந்த நேரம் சிந்திக்க வேண்டிய நேரம்.
0 கருத்துகள்