Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

உணவகத்தில் மட்டன் குழம்பில் கிடந்த மர்மமான ஒன்று.

 


சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல உணவகம் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருத்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேரை கிடந்துள்ளது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த உணவு சாப்பிட்டவர்கள் நாலடி ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். அப்போது, வாடிக்கையாளருக்கும். உணவகம் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்க்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்