Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிக்க எனக்கு விருப்பம இல்லை டிரம்ப்.

 


இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற வட்டமேஜை கூட்டத்தில் அவர் பேசுகையில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களை தயாரிப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் உலகில் மிக அதிக அளவில் வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவே அந்நாட்டில் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும்.

அமெரிக்க பொருள்கள் மீது எந்த வரியும் விதிக்காமல் இருக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்நிலையில் தனது ஐஃபோன் உற்பத்தி நடவடிக்கைகளை இந்தியாவை குறித்து தோஹாவில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தக வட்டமேஜை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.

முழுவதும் ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்துவதை நான் விரும்பவில்லை. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரிடிம் குக்கிடம் நான் பேசினேன். ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன்களை இந்தியாவில் தயாரிப்பதற்குப்பதிலாக, அமெரிக்காவில் அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

எனினும் இந்தியாவில் தனது ஐஃபோன் உற்பத்தியை விரிவு படுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதலீட்டுத்திட்டங்கள் உறுதியாக உள்ளன. அந்த நிறுவனத்தின் முக்கிய உற்பத்தித் தளமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என ஆப்பிள் நிர்வாகிகள் உறுதிபட கூறியுள்ளனர் என்று தெரிவித்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்