உச்சநீதிமன்றம் 52 வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி உச்சநீதிமன்றம் 51 வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
நீதிபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பி.ஆர். கவாய் வரும் நவம்பர் 23ம் தேதி பணி ஓய்வு பெறும் வரை சுமார் 6 மாதங்களுக்கு இந்த பதவியை வகிப்பார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது. 2007 மற்றும் 2010-க்கு இடையில் பணியாற்றிய நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி கவாய் ஆவார்.
0 கருத்துகள்