இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றுவந்த போர் சனிக்கிழமை மாலை 5.00 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் காஷ்மீரிலுள்ள பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடித்தது. அது மேலும் விரிவடையக்கூடாது போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என இரண்டு நாடுகளைச் சேர்ந்த சனநாயக சக்திகள் வலியுறுத்தி வந்தன. உலக அளவில் ஈரான், சீனா, ஜி7 நாடுகள் போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டன அதற்கெல்லாம் உடன்படாமல் இரண்டு நாடுகளும் போரைத் தீவிரப்படுத்தின. இராணுவ மையங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக இரண்டு நாடுகளும் சொன்னபோதிலும் இரண்டு தரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட பொது மக்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்துவதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அவர்கள் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களோடும் பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடமும் பேசினார். அமெரிக்கா மேற்கொண்ட சமரசத்தின் விளைவாகவே இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் அறிவித்தார்.
0 கருத்துகள்