Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

99% சொத்தை தானமாக வழங்கப் போகிறேன் பில்கேட்ஸ்.

பில் கேட்ஸ் தனது சொத்தில் 99% தானமாக வழங்கும் பெரிய திட்டத்தை தனது இணைய தளத்தில் கூறியுள்ளார் 

என்னுடைய சொத்துக்களை தானமாக வழங்கலாம் என முடிவு செய்த போது. அதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக ஒரு புதிய புராஜெக்டை நான் தொடங்கினால் என்ன செய்வேனோ அதேயே போல் தான் செய்தேன். அதாவது புத்தகம் வாசித்தேன். பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் அறக்கட்டளை குறித்து அறிந்து கொண்டேன். அது எனக்கு சில புரிதலை கொடுத்தது.

மேலும், உலகம் முழுவதும் உள்ள சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சில புத்தகங்களை வாசித்தேன். நான் படித்தவற்றில் மிகச் சிறந்தது என்றால் 1889-ம் ஆண்டு ஆண்ட்ரூ கார்னகி என்பவர் எழுதிய THE GOSPEL OF WEALTH என்ற கட்டுரை தான். செல்வந்தர்கள் தங்கள் சொத்துகளை சமூகத்துக்கு திரும்ப தரும் பொறுப்பு உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பணக்காரராக இறக்கும் ஒரு மனிதன் அவமானத்துடன் இறக்கிறான் என அதில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. நான் இறக்கும் போது மக்கள் என்னை குறித்து பேசுவார்கள். ஆனால், நான் பணக்காரராக இருந்தேன் என யாரும் சொல்ல மாட்டார்கள். நான் பெற்றுள்ள செல்வத்தை கொண்டு மக்களுக்கு உதவ முடியும் என நம்புகிறேன்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்