Ticker

6/recent/ticker-posts

கேரள கடலில் கவிழ்ந்த கப்பல் 22 பேர் கதி என்ன.?

 


கேரள அரபிக்கடல்  பகுதியில் எம்.எஸ்.சி. எல்சா 3 என்ற கன்டெய்னர் கப்பல், சனிக்கிழமை சாய்ந்ததாக செய்தி  வெளியே வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அரபிக்கடல் கொச்சி கடற்கரை அருகில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் காப்பாற்றப்பட்டனர். இந்த கப்பலில் 643 கன்டெய்னர்கள் இருந்தன, அவற்றில் 13 கன்டெய்னர்கள் ஆபத்தான சரக்குகளையும், 12 கன்டெய்னர்கள் கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்தன. மேலும், கப்பலின் தொட்டிகளில் 84.44 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் எண்ணெய் இருந்தது.

கடலோர பாதுகாப்பு படை  ஒரு மாசு எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர். எண்ணெய் கசிவைக் கண்டறியும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு டோர்னியர் விமானம் அப்குதியை வான்வழியாக ஆய்வு செய்து வருகிறது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் நடத்தி கடற்கரைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து 20 கடல் மைல் வரை உள்ள பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்கரையோறங்களில் வசிப்பவர்கள் யாரும் மிதந்து வரும் எந்த பொருட்களையும் தொட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன் துறை  கன்டெய்னர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இரண்டு குழுக்களை அமைக்கிறது. மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை சமாளிக்க இரண்டு விரைவு பதிலளிப்பு குழுக்கள் அமைத்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சுமார் 100 கன்டெய்னர்கள் மிதந்து கொண்டு மணிக்கு 3 கிமீ வேகத்தில் கேரள கடற்கரை நோக்கி நகர்ந்து வருகின்றன. மீதமுள்ள கன்டெய்னர்கள் கப்பலுடன் சேர்ந்து 53 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளன.தற்போது எந்த எண்ணெய் கசிவும் பதிவாகவில்லை. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்