டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு படத்தில் அப்துல்கலாம் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்துக்கு 'கலாம் மிஸைல் மேன் ஆஃப் இந்தியா'என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை 'ஆதி புருஷ்' ஓம் ராவத் இயக்குகிறார். அப்துல் கலாம் எழுதிய அக்னிச் சிறகுகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகிறது. சைவின் குவாட் ராஸ் திரைக்கதை எழுதுகிறார் குழந்தைப் பருவம் முதல் அப்துல் கலாமின் பயணத்தை சொல்லும் படமான இதுகுறித்து ஓம் ராவத் கூறுகையில், 'ராமேஸ்வரம் முதல் ராஷ்டிரபதி பவன் வரை ஒரு லெஜண்டின் பயணம் தொடங்குகிறது. அப்துல் கலாம் வேடத்தில் நடிப்பது குறித்து தனுஷ் கூறுகையில் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா வேடத்தில் நான் நடிப்பதை மிகப்பெரிய பாக்கியமாகவும், அதிக பணிவாகவும் உணர்கிறேன் என்றார்.
0 கருத்துகள்