நமது நாட்டில் மக்களின் முக்கிய உரிமையான வாக்கு திருடப்படுகிறது. ஒவ்வொரு குடிமக்களின் வாக்கும், ஆட்சியாளர்களை தீர்மானம் செய்யும் முக்கிய உரிமை ஆனால் 2024 நடந்து முடிந்த தேர்தல்களில் 'ஓட்டு திருட்டு' நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இது சனநாயகத்தின் மீது நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது.
ஓட்டு திருட்டு நடந்ததை விரிவாக பார்ப்போம் எதிர் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள்.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஓட்டு திருட்டு நடந்துள்ளது.குறிப்பாக கர்நாடகாவில், 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் சுமார் 1,00,250 போலி வாக்குகள் பதிவானதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். இந்த முறைகேடு ஐந்து விதமாக நடந்ததாக அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்
5 விதமான முறை கேடுகள் நடந்துள்ளது.
போலி வாக்காளர்கள் ஒரே நபரின் பெயர் பல வாக்குச்சாவடிகளில் பதிாவகியுள்ளது . உதாரணமாக, ஒரு வாக்காளரின் பெயர் கர்நாடகா, உத்தரபிரதேசம், மற்றும் மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
போலி முகவரிகள் 40,009 வாக்காளர்களின் முகவரிகள் தவறானவை அல்லது இல்லாதவை. "வீட்டு எண் 0" போன்ற செல்லாத முகவரிகள் பயன்படுத்தப்பட்டன.
ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்: ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர், ஆனால் அந்த இடத்தில் யாரும் வசிக்கவில்லை.
தவறான புகைப்படங்கள்: 4,132 வாக்காளர்களின் புகைப்படங்கள் செல்லாதவை அல்லது அடையாளம் காண முடியாதவை.
புதிய வாக்காளர்களை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம் 6, 33,692 முறை தவறாக பயன்படுத்தப்பட்டு, முதியவர்களின் பெயர்கள் மீண்டும் பதிவு செய்யப்பட்டன.
இந்த ஆதாரங்களை வெளியிட்டு, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து முறைகேடு செய்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் முறை கேடுகள்.
மகாராஷ்டிராவில் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதிலும், சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 232 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதில், ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்ததாகவும், மாலை 5:30 மணிக்குப் பிறகு வாக்குச்சாவடிகளில் அசாதாரண கூட்டம் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ராகுல் காந்தி கூறும் குற்றசாட்டுக்களுக்கு தேர்தல் ஆணையம் கூறுவது என்ன.?
தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது ராகுல் காந்தி உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், கர்நாடகாவில் முறைகேடு குறித்து விசாரிக்க முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார், ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை மின்னணு வாக்காளர் பட்டியல் அல்லது சிசிடிவி காட்சிகளை வழங்கவில்லை என்று எதிர் கட்சி காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
0 கருத்துகள்