Ticker

6/recent/ticker-posts

LGBTQ + என்றால் என்ன..?


சமீப காலமாக இந்த LGBTQ+ சமூகத்தை பற்றி பெரிதாக பேசப்படுகிறது யார் இவர்கள் இவர்களுக்கு ஏன் ஆதரவூம் எதிர்ப்பும் எழுகின்றன இந்த உறவில் ஆண் இன்னொரு ஆணுடன் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் உறவில் இருப்பார்கள்

LGBTQ+ என்றால் என்ன லெஸ்பியன், கே, பைசெக்சுவல், டிரான்ஸ்ஜென்டர், குயர் மற்றும் பல எனப்படும் மனிதர்களின் இயற்கையான  பாலியல் திசைவுகள் மற்றும் ஜென்டர் அடையாளங்கள் இது ஒரு நோயோ, குறைபாடோ அல்லது மன நோயோ இல்லை.


உலக அளவில் LGBTQ+ சரியான எண்ணிக்கை இல்லை.

சுமார் 40-50 கோடி பேர் LGBTQ+ குழுவைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம்  

இந்தியா 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 2.5 லட்சம் பேர் தங்களை டிரான்ஸ்ஜென்டர் என்று காட்டினர். ஆனால், மொத்த   LGBTQ+ எண்ணிக்கை 8-10% வரை இருக்கலாம் என சில கணக்கெடுப்புகள் கூறுகின்றன.  

60 நாடுகளுக்கு மேல் ஒரே பாலின உறவுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது (எ.கா., உகாண்டா, சவூதி அரேபியா). எனவே, பலர் தங்கள் அடையாளத்தை மறைக்கிறார்கள்.  

35 மேற்பட்ட நாடுகளில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாகி உள்ளது, இது LGBTQ+ மக்களை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது.  


LGBTQ+ ஒரு நோய் இல்லை

இயற்கையானது – விஞ்ஞான ஆராய்ச்சிகள் LGBTQ+ மக்கள் பிறப்பிலேயே இந்த திசைவுகளுடன் பிறப்பதை நிரூபிக்கின்றன.  

 உளவியல் ரீதியாக சரி– உலக சுகாதார நிறுவனம் (WHO) 1990-ல் ஹோமோசெக்சுவாலிட்டி ஒரு நோய் அல்ல என்று அறிவித்துள்ளது.  

3. மருத்துவ ரீதியான ஆதரவு – பெரிய மருத்துவ அமைப்புகள் (அமெரிக்க உளவியல் சங்கம், WHO) LGBTQ+ மக்களின் உரிமைகளை ஆதரிக்கின்றன.  


LGBTQ+ மக்கள்  சாதாரண மனிதர்கள் அவர்களின் உணர்ச்சிகள் மற்றும் காதல் மற்றவர்களைப் போலவே உண்மையானவை.  

அவர்களை சரி செய்ய வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களில் எந்த தவறும் இல்லை 

LGBTQ+ உரிமைகள் மனித உரிமைகள்  அவர்களுக்கு எதிரான பாகுபாடு தவறானது 

அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்