Ticker

6/recent/ticker-posts

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் மத்திய அரசு அறிவிப்பு.

 


இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என இந்திய ஒன்றிய அரசு அறிவித்திருப்பதை  அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்றுதான் கூறியிருக்கிறார்கள். ஆனால் எப்போது அந்தக் கணக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்படவில்லை. அடுத்த சென்சஸ் கணக்கெடுப்பு என்றால் அது 2031 க்குப் பிறகுதான். அப்போது பாஜக ஆட்சியில் இருக்கவேண்டும். எனவே. இந்த அறிவிப்பு அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டதாகவே  எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர்

ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவார் அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்துவந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே 2011-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இதுவரை நடத்தாமல் ஏமாற்றி வந்த பாஜக அரசு இப்போது திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் காரணம் ஏன்‌ எனற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் இராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதைத்தான் தனது பரப்புரையில் முன்னிறுத்தி வருகிறார். அதை சமாளிப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த ஒன்றிய பாஜக அரசும் சங் பரிவார் அமைப்புகளும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதை எதிர்த்துவந்தன. அதைத் தவிர்ப்பதற்காகவே 2011-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை இதுவரை மேற்கொள்ளாமல் ஏமாற்றி வந்த பாஜக அரசு இப்போது திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் காரணம் என்ன ? என நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலின் மையப் பிரச்சனையாக சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாறியிருக்கிறது. திரு.இராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதைத்தான் தனது பரப்புரையில் முன்னிறுத்தி வருகிறார். அதை சமாளிப்பதற்காகவே ஒன்றிய பாஜக அரசு இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறது. செய்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்