முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாள் கழித்து நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் அவர் செய்த ஊழலல் வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில் கிட்டத்தட்ட 15 மாத காலம விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.
ரூபாய் 25 லட்சத்திற்கு இரு நபர் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்
வழக்கின் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரிடம் தொடர்பு கொள்ளவோ அவர்களிடம் நேரடியாகவோ பேசவோ, அல்லது மறைமுகமாகவோ பேசவோ முயற்ச்சிக்க கூடாது
வாரத்தின் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 11-12க்குள் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் துணை இயக்குநர் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் மூன்று குற்ற வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் முன்பாக ஆஜராக வேண்டும்.
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்
நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டும்
சிறு காரணங்களுக்காக வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கக்கூடாது.
மேலும் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு சட்டரீதியாகத் தடை ஏதும் இல்லை என்றும் அவர் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி என் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாடு முதல்வருக்கு என் வாழ்நாள் நன்றியைத் தெரிவிக்கிறேன் அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி.
என் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்டது. இந்த வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் வெற்றி பெற்று நிரபராதி என்று நிரூபிப்பேன் எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்